நீட் விவகாரம்-இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீட்தேர்வு குறித்த விவாதிக்க கோரி எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்கியது. அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தீர்மானத்துக்கு முன் நீட் பற்றிய விவாதம் தேவை என தெரித்தார். நீட் தேர்வு, மாணவர்கள் நலன் குறித்த விவகாரம் என்பதால் உடனடி விவாதம் தேவை எனவும், மாணவர்களின் எதிர்காலத்துடன் மத்திய அரசு விளையாடக்கூடாது எனவும் தெரிவித்தார். இந்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், எதிர்கட்சிகள் முழக்கமிட்டு அமளியின் ஈடுபட்டனர். இதனால் மக்களவையை, சபாநாயகர் ஓம் பிர்லா அவையை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார்.

varient
Night
Day