நடப்பு மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளன

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடப்பு மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. அந்தவகையில் இன்று காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி, சம்பாவில் 720 படுக்கைகளுடன் 227 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். மேலும், பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரிகளையும் திறந்து வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, ராஜ்கோட், மங்களகிரி பதிண்டா, கல்யாணி மற்றும் ரேபரேலி ஆகிய 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளை வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day