தீபாவளி நாளில் காத்திருக்கும் "மிகப்பெரிய பரிசு"... ஜி.எஸ்.டி வரி குறைப்பு பிரதமர் மோடி அறிவிப்பு...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளி நாளில் நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாகவும், அத்தியாவசிய பொருட்களின் ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நாட்டின் 79வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, ரும் தீபாவளி பண்டிகையின் போது நாட்டு மக்களுக்கு இரண்டு மிகப்பெரிய பரிசுகள் காத்திருப்பதாக தெரிவித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி முறையில் சீர்திருத்தங்களை கொண்டு வந்து நாடு முழுவதும் வரி சுமையை குறைக்கப்போவதாக பிரதமர் மோடி கூறினார். இதனால் சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்து, மலிவான விலையில் பொருட்கள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இதனால் சிறுதொழில் வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள் என்றும், இந்த வரிகுறைப்பு நமது பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் என்று சுட்டிக்காட்டினார். மேலும் ஜிஎஸ்டி வரிகுறைப்பை அமல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டு, மாநிலங்களுடன் கலந்தாலோசித்து புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை தயாரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

மேலும் நாட்டில் உள்ள இளைய தலைமுறைகள் வேலை வாய்ப்பு வசதி பெறும் வகையில் ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மூன்றரைக் கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளை மத்திய அரசு ஒருபோதும் கைவிடாது என்றும், விவசாயிகளை அரண் போல நின்று காத்து வருவதாகவும் தெரிவித்தார். மீனவர்கள் மற்றும் விவசாயிகள் வளர்ச்சிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறிய அவர், நாட்டில் 25 கோடி இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day