79வது சுதந்திர தினம் - நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்டடங்கள் அலங்கரிக்கப்பட்ட மூவர்ண விளக்குகளால் ஜொலித்தன. 


நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று  நாடு முழுவதும் உற்சகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அமராவதி அணையின் 9 மதகுகள் இந்திய நாட்டின் தேசியக் கொடியின் மூவர்ணத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இதனை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில்  புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பு தோற்றம், அலுவலக கட்டிடம் என அனைத்து இடங்களிலும் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மூவர்ண கொடி நிறத்தில் மின்னொலியில் கட்டடங்கள் ஜொலிக்கிறது.


திருச்சி சர்வதேச விமான நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தலைமை தபால்நிலையம் என மத்திய, மாநில அரசு அலுவலக கட்டிடங்கள் மின்னொளியில் ஜொலித்தது. வண்ணமயமாக ஜொலிக்கும் இந்த காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். 


Night
Day