தனி விமானம் மூலம் மஷாத் நகரில் இருந்து 292 பேர் இன்று அதிகாலை டெல்லி வருகை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரானில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 295 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போரால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து, ஆபரேசன் சிந்து நடவடிக்கை மூலம் ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை அடுத்து, போர் காரணமாக மூடப்பட்டிருந்த வான்வெளியை ஈரான் அரசு திறந்து விட்டது. இதையடுத்து, தனி விமானங்கள் மூலம் ஈரானில் இருந்து இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். 

அந்த வரிசையில், மஷாத் நகரில் இருந்து தனி விமானம் மூலம் இன்று அதிகாலை 292 பேர் டெல்லி திரும்பினர். அவர்கள் மத்திய அரசுக்கும், தூதரகத்துக்கும் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு தங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில், ஆபரேசன் சிந்து மூலம் ஈரானில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 295 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்களுடன் முதல் விமானம் இன்று டெல்லி வந்தது. இஸ்ரேலில் இருந்து தரை மார்க்கமாக ஜோர்டானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள், அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் திரும்பினர்.

Night
Day