தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக 600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240  விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 73ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 75ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9ஆயிரத்து 155 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 20ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் நகைபிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Night
Day