சுவாதி மாலிவால் விவகாரம் : காவல்துறை நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் - கெஜ்ரிவால் பேட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் தனது பெற்றோரை போலீசார் அலைக்கழிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

கெஜ்ரிவாலை பார்ப்பதற்காக சென்ற ஸ்வாதி மாலிவாலிடம் முதல்வரின் உதவியாளர் அத்துமீறியதுடன் தாக்கியதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதல்வரின் உதவியாளரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கெஜ்ரிவாலின் பெற்றோரிடமும் வாக்குமூலம் பெறவுள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கெஜ்ரிவால், காவல்துறையினரின் வருகைக்காக தன் பெற்றோர் நீண்ட நேரமாக காத்திருப்பதாகவும், தன் பெற்றோரை காவல்துறையினர் வேண்டுமென்றே அலைக்கழிப்பதாகவும் வீடியோவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Night
Day