சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது பெற்றார் நடிகர் விஜய் கனிஷ்கா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மலேசியாவில் நடைபெற்ற 2025ம் ஆண்டுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது நடிகர் விஜய் கனிஷ்காவுக்கு வழங்கப்பட்டது. 

விஜய் கனிஷ்கா நடிப்பில் 2024-ம் ஆண்டு வெளியான அதிரடி த்ரில்லர் திரைப்படமான 'ஹிட் லிஸ்ட்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. திரைப்பட இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் தயாரிப்பில் சூர்யகதிர் காக்கல்லர் மற்றும் கே.கார்த்திகேயன் இயக்கத்தில் ஆர்.கே. செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் சார்பில் இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. 'ஹிட் லிஸ்ட்' திரைப்படத்தில் விஜய் கனிஷ்காவின் திருப்புமுனை ஏற்படுத்தும் விதமான கதாபாத்திரம் நல்ல விமர்சனங்களையும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.

Night
Day