காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்‍கு எதிராக பிடிவாரன்ட் - ஜார்க்கண்ட் சாய்பாசா நீதிமன்றம் அதிரடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்‍கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்டை ஜார்க்கண்ட் சாய்பாசா நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

 2018ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமித் ஷா பற்றி சர்ச்சை கருத்துக்‍களை தெரிவித்தார். ராகுலுக்‍கு எதிராக பா.ஜ.க.,வின் பிரதாப் கட்டியார் ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த வழக்கு 2020ம் ஆண்டு பிப்ரவரியில் ராஞ்சியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்‍கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய ராகுலின் மனுவை விசாரித்த சாய்பாசா நீதிமன்றம், அவருக்‍கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. ஜூன் 26ம் தேதி நேரில் விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது.

Night
Day