சந்திரசேகர ராவுக்கு கவிதா எழுதிய கடிதம் வெளியாகி குழப்பம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும் பி ஆர் எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவுக்கு அவரது மகள் கவிதா எழுதிய கடிதம் வெளியாகி கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மாதம் நடைபெற்ற பி.ஆர்.எஸ் கட்சியின் வெள்ளி விழா கூட்டத்தில் சந்திரசேகர ராவ் பேசியது மற்றும் செயல்பாடுகளை சுட்டிக் காட்டி கடந்த 2 ஆம் தேதி கவிதா கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் இப்போது வெளியானதால் கவிதாவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளன. இதனிடயே அமெரிக்காவில் இருந்து தெலங்கானா திரும்பிய கவிதாவை கவிதா அக்காவின் அணி என்ற பதாகைகளை ஏந்தி ஏராளமான தொண்டர்கள் வரவேற்றது கட்சியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day