சல்மான் கான் வீட்டில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மும்பை பாந்த்ரா பகுதியில் வசித்து வரும் நடிகர் சல்மான்கான் வீட்டில், மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில், இதற்கு சிறையில் உள்ள ரவுடியின் சகோதரர் பொறுப்பேற்றார். தற்போது இத்தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு நபர்களின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.  

varient
Night
Day