இந்தியா
கரூர் பெருந்துயரம் -சிபிஐ கோரிய மனு மீது திங்கள்கிழமை தீர்ப்பு
கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை...
டெல்லி அரசின் சமூக நலத் துறை அமைச்சர் ராஜினாமா செய்ததால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடுப் புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், தற்போது நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் உள்ளார். சிறையில் இருந்தபடி, அவர் அரசை நடத்தி வருகிறார். கைது நடவடிக்கைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடியான நிலையில், அவரது அமைச்சரவையைச் சேர்ந்த ராஜ் குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில், சமூக நலத் துறையை கவனித்து வந்த ராஜ் குமார் ஆனந்த், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், ஆம் ஆத்மி கட்சி ஊழலில் திளைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை...
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வா?...