சண்டிகர் மேயர் தேர்தல் : தேர்தல் அதிகாரி அனில் மாஷியை நேரில் அழைத்து, தலைமை நீதிபதி சந்திரசூட். கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச் சீட்டுகள் திருத்தப்பட்டதன் மூலம், ஜனநாயகப் படுகொலை நடைபெற்று இருப்பதாக உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. வாக்குகள் பதிவான சீட்டுகளை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மீண்டும் வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

சண்டீகர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 8 வாக்குகள் செல்லாதவை என அறிவித்த நிலையில், வாக்குச்சீட்டுகளில் தேர்தல் அதிகாரி திருத்தம் செய்யும் காட்சிகள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேர்தல் அதிகாரியின் முடிவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், தேர்தல் அதிகாரியை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது தலைமை  தேர்தல் அதிகாரி அணில் மாசிஹ் நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் வாக்குச்சீட்டுகளை திருத்தம் செய்தது குறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

அதற்கு செல்லாத வாக்குகளில் மட்டும் குறிப்பு இட்டதாக தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ் தெரிவித்த நிலையில், திருத்தம் செய்த போது எதற்காக கண்காணிப்பு கேமராவை பார்த்தீர்கள் என தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார். வாக்குச்சீட்டுள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்தில் நாளை சமர்பிக்க உத்தரவிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், இன்று அனில் மாசிஹ் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். மேயர் தேர்தலில் குதிரை பேரம் நடந்தது அப்பட்டமாக தெரிய வந்துள்ளதாக காட்டமாக தெரிவித்த உச்சநீதிமன்றம், பதிவாகியுள்ள வாக்குச்சீட்டுகளை மீண்டும் எண்ணி முடிவுகளை அறிவிக்க உத்தரவிட்டது.

Night
Day