கேரளாவில் பாஜக ஆர்எஸ்எஸ் ஆகியவை, வகுப்புவாத பதற்றங்களைத் தூண்டும் வகையில் செயல்படுகிறது - ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவா மாநிலத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை, வகுப்புவாத பதற்றங்களைத் தூண்டும் வகையில் செயல்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

கத்தோலிக்க மிஷனரி செயின்ட் பிரான்சிஸ் குறித்து அம்மாநில ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் சுபாஷ் வெலிங்கர் அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரைக் கைது செய்யக் கோரி கிறிஸ்தவ சமூகத்தினர் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, பாஜக ஆட்சியின் கீழ் கோவா மாநிலத்தில் நல்லிணக்கம் தாக்குதலுக்கு உள்ளாவதாக சாடியுள்ளார். இந்தியா முழுவதும், சங்பரிவார் அமைப்பினர், உயர்மட்ட ஆதரவுடன் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். 



Night
Day