காவிரியிலிருந்து 40.43 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 40 புள்ளி 43 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹால்டர் தலைமையில் 40வது கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அதிகாரிகள் மற்றும் கர்நாடக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீர் குறித்து விவாதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன் மாதம் திறந்து விட வேண்டிய 9 புள்ளி 19 டிஎம்சி, ஜூலை திறந்து விட வேண்டிய 31 புள்ளி 24 டிஎம்சி தண்ணீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டது. அதன்படி, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 40 புள்ளி 43 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Night
Day