எழுத்தின் அளவு: அ+ அ- அ
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் GPay உள்ளிட்ட செயலிகள் மூலம் மட்டுமே டிக்கெட் வழங்கப்படுவதால் கடும் அவதியடைவதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மயிலாடுதுறை ரயில் நிலைய வழித்தடத்தில் தினம்தோறும் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் சென்று வருகின்றன. இதில் பயணம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் நிலையில், சராசரியாக தினமும் 7 லட்சம் ரூபாய் அளவிற்கு முன்பதிவு செய்யப்படாத டிக்கெடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக ரயில் நிலைய கவுண்டரில் பணம் கொடுத்தால் டிக்கெட் வழங்குவதில்லை என்றும், G pay மற்றும் Phone pe உள்ளிட்ட பரிவர்த்தனை மூலமாக மட்டுமே டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தினமும் காலை நேரத்தில் 4 ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் கூட்டம் அலைமோதும். அந்த சமயத்தில் ஆன்லைன் டிக்கெட் எடுக்க தெரியாத பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ரயில்வே நிர்வாகம் நடைமுறைக்கு ஏற்ற மாறுதல்களை செய்ய வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.