கார்கில் விஜய் திவாஸ்; வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு அஞ்சலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானை வெற்றி கொண்ட கார்கில் போர் நினைவு தினத்தில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகங்களை போற்றுவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

1999ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக இந்தியா கடைபிடித்து வருகிறது. இந்தநிலையில், கார்கில் போரின் நினைவு தினமான இன்று குடியரசுத் தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு, தாய்நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், வீரர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவை என்றென்றும் மக்களை ஊக்குவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

கார்கில் போர் நினைவு தினம் தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில், நாட்டின் பெருமையைப் பாதுகாப்பதற்காகவும், தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலையும், வீரத்தையும் இந்த நிகழ்வு நினைவுபடுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.


Night
Day