திமுக மேயரை கண்டித்து துணைமேயர் வெளிநடப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தான்தோன்றித்தனமாக முடிவு எடுப்பதாகக்கூறி துணை மேயரும், திமுக கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்ததால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஏ.எஸ்.ஜி.லூர்துசாமி கூட்ட மண்டபத்தில் தொடங்கியது. அப்போது, அரியமங்கலத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் பாதாள சாக்கடை கழிவுநீரை சேகரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ராட்சத கிணறுகளுக்கும், நாய்களுக்கான கருத்தடை மையத்திற்கும் இடையே மீன்களுக்கான உணவு உற்பத்தி ஆலை அமைக்க திமுக துணை மேயர் திவ்யா, திமுக மாமன்ற உறுப்பினர்கள் 24 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த திட்டம் நிறுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்த அமைச்சர் நேருவின் ஆதரவு மேயரான அன்பழகன்,  முனைப்பு காட்டி வருவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அனைவரும் வெளிநடப்பு செய்தால் மாமன்ற கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது. திமுக அமைச்சர்களிடையே ஏற்பட்ட உட்கட்சி பூசல் மாமன்ற கூட்டத்தில் எதிரொலித்தது தற்போது திருச்சி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day