எழுத்தின் அளவு: அ+ அ- அ
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாவட்டம் துவாக்குடியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் ப்ளஸ் 2 மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் அரசு மாதிரி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்வது பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 11ம் தேதி இப்பள்ளியில் பயின்ற பிரித்திகா என்ற ப்ளஸ் 2 மாணவி, பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது இதே பள்ளியில் பயிலும் வேலூரைச் சேர்ந்த +2 மாணவர் ஒருவரும், பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த துவாக்குடி போலீசார் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதிக்குட்பட்ட அரசு மாதிரி பள்ளியில் ப்ளஸ் 2 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.