காசா போர் முடிவு : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த விரிவான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

இது தொடர்பான தனது எக்ஸ் பதிவில், இத்திட்டம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய மக்களுக்கு மட்டுமல்லாமல் மேற்கு ஆசியாவுக்கும் நீடித்த மற்றும் நிலையான அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றிற்கு சாத்தியமான பாதைகளை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த போரை முடிவுக்கு கொண்டு வரவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துள்ள இந்த முயற்சிக்கு சம்மந்தப்பட்ட அனைவரும் ஆதரவை அளிப்பார்கள் என்று நம்புவதாக பதிவிட்டுள்ளார்.

Night
Day