கர்நாடக அமைச்சர்களுக்கு நடிகையுடன் தொடர்பு - பாஜக விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை ரன்யா ராவ், தனது உடலில் எங்கெல்லாம் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்த முடியுமோ அங்கெல்லாம் வைத்துத்தான் கடத்தலில் ஈடுபட்டதாக கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றம் கூடும் போது, தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் அமைச்சர்கள் குறித்த விவரத்தை வெளியிட உள்ளதாக கூறினார். தங்கம் எப்படி வாங்கப்பட்டது, அதை ரன்யா ராவ் எப்படி கடத்தி வந்தார். சோதனை சார்ந்த விஷயங்களில் அவருக்கு யார் எல்லாம் உதவினார்கள் என்ற விவரம் தன்னிடம் உள்ளதாகவும் பசனகவுடா பாட்டீல் தெரிவித்துள்ளார்.

Night
Day