இந்தியா
பஹல்காம் தாக்குதல் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
கேரளா ஆளுநர் ஆரிஃப் முகமது திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்களை குறிப்பிட்ட பொறுப்புகளில் நியமனம் செய்ததற்கு எதிராக இந்திய மாணவர் கூட்டமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் நிலமேலில் உள்ள கல்லூரி நிகழ்ச்சிகள் பங்கேற்பதற்காக சென்ற கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானை கண்டித்து, இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால் திடீரென காரில் இருந்து இறங்கிய ஆளுநர் ஆரிஃப் முகமது கான், போராட்டக்காரர்களை கடிந்துகொண்டதுடன் அவர்களை கைது செய்யும்படி காவல் துறையினரை வலியுறுத்தினார். ஆனால் போலீசார் ஆளுநரை அங்கிருந்து அனுப்ப முயற்சித்ததால், டீக்கடை ஒன்றின் முன்பு அமர்ந்து ஆரிஃப் முகமது கான் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...