தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
திருவள்ளூர் மாவட்டம் மணலி பகுதியில் அமைக்கப்பட்ட தார் சாலை, ஐந்து நிமிடத்திலேயே பெயர்ந்து ஜல்லி கற்களாக காட்சியளித்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மணலி மண்டலத்துக்குட்பட்ட சின்னசாமி நகர் தெருவில் தார் சாலை அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அமைக்கப்பட்ட தார் சாலை ஐந்து நிமிடத்திலேயே பெயர்ந்து ஜல்லி கற்களாக காட்சியளித்தது. மாநகராட்சி உதவி பொறியாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, பொதுமக்களை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தார் சாலை என்ற பெயரில் வெறும் ஜல்லி கொண்டு அதில் தார் கூட போடாமல் சாலை அமைத்து விட்டதாக கணக்கு காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...