கனடா பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் காலிஸ்தான் ஆதரவு முழக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்ட கூட்டத்தில் காலிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்பட்டது குறித்து டெல்லியில் உள்ள கனடா தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. கனடா தலைநகர் டொரண்டோவில் சீக்கியர்களின் கல்சா தின நிகழ்வில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டார். அதில் உரையாற்ற அவர் மேடைக்கு வந்தபோது கூட்டத்தில் சிலர், "காலிஸ்தான் ஜிந்தாபாத்" என முழக்கங்களை எழுப்பினர். ட்ரூடோ அதனைக் கண்டிக்காமல் பேச்சைத் தொடர்ந்தார்.  இதற்கு,  டெல்லியில் உள்ள கனடா தூதரை அழைத்து மத்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவில் பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்டுள்ள அரசியல் ஆதரவை இது மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுவதாகச் சாடியுள்ளது. 

Night
Day