ஓய்வு பெறுகிறார் ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ், 36 ஆண்டு சேவைக்குப்பின் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார்.

மகாராஷ்டிர மாநிலம் சதாராவைச் சேர்ந்த இவர், 1988ம் ஆண்டு இந்திய ரயில்வேயில் பணியில் சேர்ந்தார். 1989ல் உதவி ரயில் ஓட்டுநராக முன்னேறிய சுரேகா யாதவ், 1996ம் ஆண்டு முதல் சரக்கு ரயில்களை இயக்கினார். 2023ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி சோலாபூர் - மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையம் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்கியதன் மூலம் அதிவேக ரயில் ஓட்டுநரான பெண் என்ற சாதனையையும் சுரேகா யாதவ் படைத்தார். வந்தே பாரத் முதல் டெக்கான் குயின் வரை பல ரயில்களை இயக்கி 36 ஆண்டுகள் பணியாற்றிய அவர், இந்த மாதம் 30ம் தேதியுடன் விடைபெறுகிறார். எண்ணற்ற பெண்களுக்கு உத்வேகமாக உள்ள சுரேகா யாதவ், தடைகளை தாண்டி பெண்கள் எந்த கனவையும் அடைய முடியும் என்பதை நிரூபித்திருப்பதாக மத்திய ரயில்வே புகழாரம் சூட்டியுள்ளது.

Night
Day