ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர் சாப்பிட்ட சாக்லேட்டில் செயற்கை பற்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஓய்வுபெற்ற பெண் பள்ளி முதல்வர் சாப்பிட்ட சாக்லேட்டில் செயற்கை பற்கள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களாக உணவு பொருட்களில் புழுக்கள், பூச்சிகள் கிடந்ததாக புகார்கள் அவ்வப்போது வீடியோவுடன் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்தியபிரதேசத்தின் கர்கோன் பகுதியில் ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர் மாயாதேவி என்பவர் சாப்பிட்ட சாக்லேட்டில் செயற்கை பற்கள் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உணவு பாதுகாப்புத் துறைக்கு புகாரளித்தார். அதன்பேரில் அதிகாரிகள் சாக்லேட் வாங்கிய கடையில் இருந்து மாதிரிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

varient
Night
Day