ஒடிசா : சபாநாயகர் இருக்கை மீது ஏறி எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிஷாவில் கள்ளச்சாராயம் குடித்து சிலர் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டத்துறை அமைச்சர் பதவி விலக கோரி எதிர்க்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கஞ்சம் மாவட்டத்தின் சிகிடி பகுதியில் கள்ள சாராயம் குடித்து அப்பகுதியை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பிரிதிவிராஜ் பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சட்டப்பேரவை கூட்டத்தின்போது பிஜூ ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

varient
Night
Day