ஒடிசாவில் புலிகள் காப்பகத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கசகசா செடிகள் அழிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசாவில் சிமிலிபால் புலிகள் காப்பகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான கசகசா செடிகளை அழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிலிபால் புலிகள் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் போதைப்பொருளாக பயன்படும் கசகசா செடிகள் பயிரிடப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த காவல்துறையினர் 10 கோடி மதிப்பிலான கசகசா தோட்டங்களை அழித்தனர். மேலும் இதுதொடர்பாக மயூர்பஞ்ச் காவல்துறையினர் ஜாஷிபுர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

varient
Night
Day