எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்ற சூழலுக்கு மத்தியில் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது.
பஹல்காமின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய இரு இடங்களிலும் உள்ள 9 பயங்கரவாத அமைப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் மத்தியில் பதற்றமான சூழல் நிலவியது. தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறுவதாக கூறப்படும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கட்டடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். மேலும், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.