இந்தியாவின் UPI பணப்பரிமாற்ற முறைக்கு IMF பாராட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அதிவேகமான யுபிஐ பணப்பரிமாற்ற முறையை கொண்டுள்ள இந்தியாவிற்கு சா்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள ஆய்வுக்குறிப்பில், கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் யுபிஐ பணப்பரிமாற்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மிக விரைவான வளா்ச்சியைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காகிதப் பணப்பரிமாற்ற முறை குறைந்துள்ளது என்றும், ஒரு மாதத்துக்கு 180 கோடி முறைக்கு மேல் இந்த முறையில் பணப்பரிமாற்றம் இந்தியாவில் நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. சிறிய கிராமங்களில் உள்ள சிறு வா்த்தகா்கள் கூட யுபிஐ பணப் பரிமாற்றத்தை ஏற்பதால் வங்கி சேவையும் சிறப்பாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day