ஆ.ராசா புகைப்படத்தை கிழித்து எரிந்த பாஜகவினர்

எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைப் பற்றி அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் பாஜகவினர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி, ஹரியானா போல தமிழகத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றார். இதனை விமர்சித்து  சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எம்.பி ஆ.ராசா அமைச்சர் அமித்ஷாவை முட்டாள் என விமர்சனம் செய்தார். இது பாஜகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் புதுச்சேரி பாஜக கட்சியைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்டோர் இந்திரா காந்தி சதுக்கம் அருகே எம்பி ஆ.ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது ஆ.ராசாவின் புகைப்படத்தை காலணியால் அடித்தும், தீயிட்டும் கொளுத்தினர். தொடர்ந்து எம்.பி ஆ.ராசாவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

Night
Day