உணவு பாக்கெட்டில் நெளிந்த புழுக்கள் - கடைக்கு சீல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பேக்கரி ஒன்றில் முந்திரிப் பருப்பு உணவுப் பொருட்களில் புழுக்கள் நெளிந்தை அடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

கேடிசி நகரில் செயல்பட்டுவந்த பேக்கரியில் வாடிக்கையாளர் ஒருவர் பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் கிஸ்மிஸ் பழங்களை 2,198 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, ஐந்து கிலோ முந்திரிப் பருப்பில் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, அவற்றை கடைக்குத் திரும்பக் கொண்டு சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடையில் கெட்டுப்போன நிலையில் இருந்த இரண்டு கிலோ அத்திப் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உணவுப் பொருட்களின் தரத்தில் பெரும் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால், அதிகாரிகள் உடனடியாக அந்தக் கடைக்கு சீல் வைத்து மூடினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள "நட்ஸ் அண்ட் சாக்கோஸ்" கிளைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அந்த கடையில் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Night
Day