எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் உதவி ஆணையர், மாநகராட்சி அதிகாரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளன. இதற்கான வரி வசூல் பணிகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக 2,3,4,5 ஆகிய மண்டலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு வரிவிதிப்பு குறைத்து மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் விரி விதிப்புக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரி செந்தில்குமரன், ஒய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்ராஜன், இடைத்தரகர் முகமது நூர் ஆகிய 3பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் என 55க்கு மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.