ஆபாச வீடியோ பதிவிட்ட 18 ஓடிடி-கள், 19 இணையதளங்கள் முடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆபாச மற்றும் மோசமான காட்சிகளை ஒளிபரப்பிய 18 ஓடிடி தளங்களை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது. 18 ஓடிடி தளங்களுக்கு தொடர்புடைய 19 இணையதளங்களும், 10 செயலிகளும், 57 சமூக வலைதள கணக்குகளும், முடக்கப்படுவதாகவும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அறிவித்துள்ளது. ஆபாச மற்றும் மோசமான காட்சிகளை ஒளிபரப்பிய 18 ஓடிடி தளங்களுக்கு பல முறை எச்சரிக்கை விடுத்தும், ஆபாச காட்சிகள் ஒளிபரப்பை நிறுத்தாததால், 18 ஓடிடி தளங்களும் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. ட்ரீம் ஃபிலிம்ஸ், அன்கட் அட்டா, ட்ரை ஃபிளிக்ஸ், எக்ஸ் பிரைம், எக்ஸ்ட்ரா மூட் உள்ளிட்ட 18 ஓடிடி தளங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

Night
Day