ஆந்திர: கடப்பா தொகுதியில் ஒய்.எஸ் ஷர்மிளா ரெட்டி போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் கடப்பா தொகுதியில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா ரெட்டி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது. ஆந்திரா, பீகார், ஒடிசா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான 17 மக்களவை இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல், 175 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட ஆந்திரா, ஓடிசா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல்களை, காங்கிரஸ் தலைமை ளியிட்டுள்ளது. அதில், ஆந்திராவின் கடப்பா மக்களவை தொகுதியில் ஒய்.எஸ். ஷர்மிளா ரெட்டி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளா அவரது தந்தையான ராஜசேகர ரெட்டி 4 முறை நாடாளுமன்ற உறுப்பினாராக தேர்ந்தெடுக்கபட்ட கடப்பலா தொகுதியில் இந்த முறை மகள் சர்மிளா போட்டியிடுவது அதிக கவனத்தை பெற்றுள்ளது என்றே சொல்லலாம். 

Night
Day