ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்றார் பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படைதளத்திற்கு சென்ற பிரதமர் மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய பகுதிகள் மீது பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை இந்திய ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்தது. பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போர் பதற்றம் முடிவுக்கு வந்தது. இந்தநிலையில், பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி, விமானப் படையினரின் சிறப்பான பணிக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது பிரதமருடன் விமானப்படை வீரர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். 

Night
Day