எழுத்தின் அளவு: அ+ அ- அ
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 நபர்களுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தமது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2019-ஆம் ஆண்டில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 நபர்களும் குற்றவாளிகள் என உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
இது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைத்த உரிய நீதியாகும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கக்கூடாது என கூறியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, இந்த தீர்ப்பு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு சரியான பாடத்தை கற்பித்துள்ளது- இதன் மூலம் வரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, திமுக ஆட்சியில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் அனைத்து குற்றங்களுக்கும், அதற்கு காரணமான குற்றவாளிகளுக்கும் வரும் காலங்களில் உரிய தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்து கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.