எழுத்தின் அளவு: அ+ அ- அ
அருணாச்சலப்பிரதேசத்தில் 5 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
திரிபுரா, அருணாச்சலப்பிரதேச மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தமது பயணத்தின் முதலாவதாக அருணாச்சலப்பிரதேச மாநிலம் இட்டா நகருக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த உள்ளூர் மக்களின் கைவினைப்பொருட்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து ஜி.எஸ்.டி வரிகுறைப்பு விளைவுகள் குறித்து உள்ளூர் வணிகர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இதையடுத்து நிகழ்ச்சி மேடைக்கு சென்ற பிரதமர் மோடி, 5 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் கூறினார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியிருந்ததாகவும், எங்களின் அரசாங்கம் வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். எங்கள் அரசாங்கத்தின் மத்திய அமைச்சர்கள் 800க்கும் மேற்பட்ட முறை வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றுள்ளதாகவும், ஒரு பிரதமராக நான் 70க்கும் மேற்பட்ட முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளதாகவும் பிரதமர் பெருமித்ததுடன் குறிப்பிட்டார்.