அதிக நீர்வரத்து - திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வினாடிக்கு 500 கன அடிக்கும் மேல் உபரி நீரானது கோதையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் குமரி குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 3-வது நாளாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day