'போதைப் பொருள் கடத்தல் திமுக' ஹேஸ்டேக் ட்ரண்டிங்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போதைப் பொருள் கடத்தல் வழக்‍கில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதையடுத்து, தற்போது 'போதை பொருள் கடத்தல் திமுக' என்ற ஹேஷ்டேக் எக்ஸ் வலைதளத்தில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக், இரண்டாயிரம் கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்‍கில் தொடர்பிருந்தது அம்பலமானது. இதனையடுத்து கட்சியில் இருந்து நீக்‍கப்பட்ட அவரை, டெல்லியில் நேற்று போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள்​கைது செய்தனர். இதனையடுத்து, எக்‍ஸ் வலைதளத்தில் 'போதை பொருள் கடத்தல் திமுக' என்ற ஹேஷ்டேக்கில் பல தரப்பினரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால், தற்போது இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிடாகி வருகிறது. இதன்மூலம் திமுக மீதான மக்‍கள் நம்பிக்‍கை குறைந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

varient
Night
Day