'காலாவதி மதுபானங்களை சேமித்து வைத்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்' - கலால்துறை துணை ஆணையர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகளில் காலாவதி மதுபானங்களை சேமித்து வைத்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என கலால்துறை துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி காரைக்கால், மாஹே, ஏனாமில் 534 மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. புதுச்சேரியில் அண்மையில் மதுபானம் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டதால், இருப்பில் இருக்கும் பழைய மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட பிறகே, புதிய விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என கலால்துறை எச்சரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக மதுபான கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது, காலாவதியான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து, காலாவதியான மதுபானங்களை சேமித்து வைத்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், அத்தகைய மதுபானங்கள் கலால்துறை முன்னிலையில் அழிக்க வேண்டும் என்றும் கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.

Night
Day