தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு- பாஜக மூத்த தலைவர் தமிழிசை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை திமுக அரசு எடுக்கவில்லை எனவும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார். 


சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவள்ளூர் பாலியல் வழக்கில் குற்றாவளியை கண்டுபிடிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். தெலுங்கானா, பீகார் போன்று தமிழகத்தில் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தி இருக்க வேண்டும் என்று தமிழிசை குறிப்பிட்டார். அவ்வாறு செய்யாமல் எல்லாவற்றிலும் மத்திய அரசு பின்னால் சென்று திமுக அரசு ஒளிந்து கொள்வதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

Night
Day