'இந்தியா-பாகிஸ்தான் மட்டுமே போர் நிறுத்த ஒப்பந்த முடிவை எடுத்தன' - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர் நிறுத்தம், அமெரிக்காவின் தலையீட்டால் அல்ல என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.  

துப்பாக்கிச்சூட்டை நிறுத்தத் தயாராக இருப்பதாக மே 10 அன்று பாகிஸ்தான் ராணுவம் ஹாட்லைன் தொடர்பு மூலம் செய்தி அனுப்பியதாகவும் அதற்கேற்ப இந்தியா பதிலளித்தாகவும் கூறியுள்ளார். அமெரிக்கா உட்பட பிற நாடுகள் கவலை தெரிவித்து இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்த போதிலும், போர் நிறுத்தம் குறித்து டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் அழுத்தம் திருத்தமாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா அமெரிக்காவில்தான் இருந்தது என்றும் ஜெய்சங்கர் கிண்டலாகத் தெரிவித்தார்.

Night
Day