"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பரம்பரரைச் சொத்துகளுக்கு வரி விதிக்கும்" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பரம்பரைச் சொத்துகளுக்கு வரி விதிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், முன்பு ராகுலின் தந்தைக்கும், தற்போது ராகுலுக்கும் ஆலோசகராக இருக்கும் சாம் பிட்ரோடா, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கடினமாக உழைத்து சம்பாதிப்பவர்கள் மீது அதிக வரி திணிக்கப்பட வேண்டும் என்று கூறி இருப்பதாக குறிப்பிட்டார். அதன்படி பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறோம் என காங்கிரஸ் தற்போது கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார். அப்படி என்றால், பெற்றோரிடமிருந்து அவர்களின் வாரிசுகள் பெறும் சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும் எனக் கூறிய பிரதமர் மோடி, உங்கள் பிள்ளைகளிடம் இருந்து சொத்துகளை காங்கிரஸ் பறித்துவிடும் எனக் குற்றம் சாட்டினார்.

Night
Day