முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா : 4ம் நாள் மயில் வாகனத்தில் முத்தாரம்மன் எழுந்தருளி திருவீதி உலா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழாவின் 4ம் நாள் சப்பரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து தூத்துக்குடி குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோயிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் தசரா திருவிழா இந்த மாதம் 23-ம் தேதி  கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. 

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறக்கூடிய தசரா திருவிழாவில் நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 2ம் தேதி கடற்கரையில் நடைபெறுகிறது.

Night
Day