எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழுக்கும், தமிழ் சமூகத்திற்கும் அரும்பணிகள் ஆற்றியவரும் தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 121வது பிறந்தநாளில் அவரது நினைவை போற்றிடுவோம் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழில் நாளிதழுக்குரிய மொழிநடையை எளிய முறையில் வடிவமைத்து, பாமரர்களும் நாட்டு நடப்புகளை எளிதாக அறிந்திடும் வகையில், உண்மை செய்திகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவரும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான தமிழர் தந்தை திரு. சி.பா ஆதித்தனாரின் 121வது பிறந்தநாளில் அவர்தம் நினைவை போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் தமிழுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆற்றிய அரும்பணிகளையும், தன்னலமற்ற சேவைகளையும் எந்நாளும் போற்றிடுவோம் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.