''பாலஸ்தீன தனி நாடு அங்கீகாரம் பைத்தியக்காரத்தனம்'' - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐநா சபையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ பேசிய போது  ஐநா சபை பிரதிநிதிகள் எழுந்து சென்றனர். எனினும் வெறிச்சோடிய சபையில் பேசிய நெதன்யாஹூ, பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம் என்று கூறினார்.

ஐநா சபையில் நடைபெற்று வரும் ஆண்டு பொதுக் கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். அதன்படி நேற்று இரவு பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அப்போது அரங்கத்தில் இருந்த பிரதிநிதிகள் அனைவரும் எழுந்து வெளியேறினர். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபடுவதாக ஐநா பிரதிநிதிகள் குற்றம்சாட்டினர்.

இருப்பினும் யாரும் இல்லா அரங்கத்தில் பேசிய நெதன்யாஹூ,  இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமான ஜெருசலேம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, அங்கு குடியிருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்ததாகவும் ஆனால் பாலஸ்தீன தேசிய ஆணையம் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட பிறகு, ஜெருசலேமில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து போனதாகவும் தெரிவித்தார்.
 
இஸ்ரேல் மீது 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களுக்கும், அதனை ஆதரித்தவர்களுக்கும்  மகத்தான பரிசை வழங்குகிறீர்கள் என்று கடுமையாக சாடினார்.

அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு ஜெருசலேமில் இருந்து ஒரு மைல் தொலைவில் பாலஸ்தீனர்களுக்கு ஒரு நாட்டைக் கொடுப்பது என்பது, இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அல்-கொய்தாவுக்கு நியூயார்க் நகரத்தில் இருந்து ஒரு மைல் தொலைவில் ஒரு நாட்டைக் கொடுப்பதைப் போன்றது என்றார்.பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம் என்றும் இது வெறும் பைத்தியக்காரத்தனம் என்றும் இதை செய்ய ஒரு போதும்  அனுமதிக்க மாட்டோம்  என்றும் தெரிவித்தார்.

Night
Day