புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் கழகத்தை ஒன்றிணைக்க வேண்டி கழக நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் கழகத்தை மீண்டும் ஒன்றிணைக்‍க வேண்டியும், சின்னம்மா தமிழக முதலமைச்சர் ஆக வேண்டியும் கழக தொண்டர்கள் திண்டுக்கல் நத்தம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடத்தி பிரார்த்தனை செய்தனர்.

நத்தம் அஇஅதிமுக கழக சார்பில் உலக பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் அதிமுக தொண்டர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தினர். அஇஅதிமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் A.N. ராஜா தலைமையில் மாலை சுமார் ஏழு மணி அளவில் நத்தம் மாரியம்மன் கோவிலில் திரண்ட அஇஅதிமுக கழகத் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாரியம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை செலுத்தியும் , 108 தேங்காய்களை உடைத்தும், சின்னம்மா பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். மேலும் பிளவு பட்டு கிடக்கும் அஇஅதிமுகவை ஒன்றிணைத்தும் சின்னம்மா தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சியை அமைத்து முதல்வராக வேண்டியும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்‍கு அன்னதானம் செய்தனர். 

இந்நிகழ்வில் மாவட்ட MGR இளைஞர் அணி இணைச் செயலாளர் தினேஷ், நத்தம் தெற்கு இளைஞர் அணி செயலாளர் பாலாஜி, நத்தம் வடக்கு அம்மா பேரவை செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் சிவக்குமார், தனசேகரபாண்டி, கருப்பையா, சரவணன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Night
Day