தேர்தலில் ராதிகா வெற்றி பெற வேண்டி நடிகர் சரத்குமார் அங்கபிரதட்சணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகரில் மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி பராசக்தி மாரியம்மன் கோயிலில் நடிகர் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டார்.

நடிகரும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பாக களம்கண்டுள்ளார். இதனையடுத்து, சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் தேர்தலின்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஏழு கட்டமாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் தனது மனைவி ராதிகா வெற்றிபெற வேண்டி பராசக்தி மாரியம்மன் கோயிலில் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு நடத்தினார்.

Night
Day