தீர்த்தவாரி திருவிழாக்களில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கோயில் தீர்த்தவாரி திருவிழாக்களில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில், 40க்கும் மேற்பட்ட சாமிகளுக்கு தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயபாளையத்தில் உள்ள கோமுகி ஆற்றங்கரையில் நடைபெற்ற திருவிழாவில், பாலசுப்பிரமணியர், வரதராஜ பெருமாள் மற்றும் மாரியம்மன் ஆகிய சாமிகளுக்கு தீரத்தவாரி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் தைத்தேர் திருவிழா கடந்த 16ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, நம்பெருமாள் தங்ககருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் அருகே காடம்பாடியில் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான, பெரிய தேர்பவனியில் திரளான மக்கள் பங்கேற்று, புனித செபஸ்தியாரை வழிபட்டனர். இதில் பங்கு தந்தை பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும், கூட்டுப்பாடல் பிரார்த்தனையும் நடைபெற்றன. 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  விழாவின் ஒருபகுதியாக, மர அன்னபட்சி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

Night
Day